வேர்க்கடலையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!!
குடல் புற்று நோய் குணமாக புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் படி 2012ஆம் ஆண்டு முதல் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் உலகெங்கிலும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் நிறைந்திருக்கும் சைட்டோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருள் வயிறு மற்றும் குடல் செல்களில் புற்று நோய் செல்கள் வளராதவாறு தடுத்து, குடற்புண் ஏற்பபடமால் பாதுகாக்கிறது. வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நிலக்கடலை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாக குறைந்திருப்பதாக அமெரிக்க மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
அல்சைமர் ஏற்படாமல் தடுக்க அல்சைமர் என்பது முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி நோயாகும். இந்த நோய் நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலும், மேலை நாடுகளில் மிக அதிக அளவில் ஏற்படுகின்ற ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக மூளைக்குத் தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கூறப்படுகிறது. நிலக்கடலையில் நியாசின் அமிலம் அதிகமிருக்கிறது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு ஞாபக சக்தி வலுவடைவதோடு, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மேலும் அந்நபருக்கு 70 சதவீதம் வரை இந்த அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிலகடலையில் அடங்கியுள்ள சத்துக்கள்
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட் – 21 மி.கி.
நார்சத்து – 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம் – 25 மி.கி.
ட்ரிப்டோபான் – 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின் – 1.512 கி
விட்டமின் – பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
சுண்ணாம்புச்சத்து – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
இதய நோய்கள் வராமல் தடுக்கும்
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
மூளையை சுறுசுறுபாக்கும்
நிலக்கடலையில் ‘பரிப்டோபான்’ என்ற அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. செரட்டோனின் மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் உதவும் விட்டமின், நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. பித்தப் பை கல்லைக் கரைக்கும், நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் தக்கவைக்க உதவுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள துத்தநாகம் மற்றும் தாமிரச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.