0 0
Read Time:2 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தை எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து ராமலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் இடத்தில் 15 அடிக்கு மணல் மேடாகி உள்ளது. இதனால் துறைமுகத்தில் படகு நிறுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் படகுகளை நிறுத்தும்போது படகுகள் காற்றில் ஒன்றோடொன்று மோதி உடைந்து சேதம் ஏற்படுகிறது. தற்போது துறைமுகத்தில் படகு நிறுத்தும் அளவிற்கு உரிய கட்டுமானம் இல்லை. எனவே துறைமுகத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 300 மீட்டர் தூரத்துக்கு புதிய படகு அணையும் தளம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் மற்றும் மீனவ தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று இந்த ஆண்டே 300 மீட்டர் தூரத்திற்கு புதிய படகு அணையும் தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பி.எம்.என்.என்.எஸ். என்ற திட்டத்தின் கீழ் ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்காகவும், நடவடிக்கைகளுக்காகவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மீன் உலர்தளம் அமைக்கவும் ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதற்காக எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை வனத்துறை அதிகாரிகள் இதற்கு தடை விதித்துள்ளனர். இதனை வனத்துறை அதிகாரிகளிடம் எடுத்து பேசி உடனடியாக மீன் உலர்தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் மற்றும் பழையாறு மீனவ பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %