கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவ்வகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம்.
கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல சரும நோய்களையும் எதிர்க்கும். கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
சளி, காய்ச்சல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.
நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் கற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் கலந்து குடிக்கவேண்டும். இவ்வாறு 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.
கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்:
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.
கற்பூரவள்ளி இலையில் மக்னீசியம் மற்றும் கால்கியம் அதிகம் உள்ளது. இது எலும்பு மெட்டபாலிசத்திற்கு மிகவும் முக்கியமான பொருட்களாகும். எனவே உங்கள் எலும்பு ஆரோக்கியமாக பிரச்சனைகளின்றி இருக்க வேண்டுமானால், கற்பூரவள்ளி இலையை அன்றாடம் சாப்பிடுங்கள்.