0 0
Read Time:2 Minute, 55 Second

நெல்லிக்குப்பம்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி கடலூர் அடுத்த வரக்கால்பட்டில் நடைபெற்றது.

இதற்கு கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜெயக்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து இயற்கை விவசாயம் குறித்த கையேடு மற்றும் விவசாய இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:-இயற்கை விவசாயம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தை மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். ஆகையால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து இயற்கை உரங்களை உற்பத்தி செய்து அதிகளவில் விற்பனை செய்தால் அதிக வருவாயை ஈட்ட முடியும். இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் இயற்கை உரங்கள் அதிக அளவில் எளிதாக கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி கடலூரை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க வேண்டும். மேலும் கடலூர் வட்டாரத்தில் இயற்கை முறை சாகுபடியை கடைபிடிக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு குழு அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், விவசாயி கவாஸ்கர், கடலூர் வேளாண்மை அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் சிவமணி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %