Read Time:1 Minute, 16 Second
அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 80.
அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அஞசலி செலுத்தினர்.
முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவுடன் அஞ்சலி செலுத்த வந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார் முதல்வர்.