0 0
Read Time:3 Minute, 21 Second

மின்வாரிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை  கொடுத்த செயற்பொறியாளரை கைது செய்யக்கோரி மயிலாடுதுைையில்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் விதவை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரேமா, விசாலாட்சி, ராணி, செல்வபாக்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா, மாவட்ட பொருளாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் விதவை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மாதர் சங்கத்தினர் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரி சாலையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சண்முகவள்ளி, கண்ணகி, தமிழ்குடிமகள், சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வனரோஜா நன்றி கூறினார். 

இது தொடர்பாக மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் நிருபர்களிடம் கூறும்போது, நீடூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகையில் கையாடல் செய்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான விசாரணை முடிந்து இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் என்மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது வேண்டும் என்றே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். இந்த புகார் உண்மைக்கு மாறானதாகும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %