0 0
Read Time:1 Minute, 56 Second

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுவை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று ககாலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ராஜீவ் காந்தி சிலை அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. முன்பக்கம் புகை வருவதை பார்த்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அப்போது குபுகுபுவென்று தீ பற்றி எரியத் துவங்கியது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.உடனடியாக பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.காலை நேரத்தில் நடுரோட்டில் பேருந்து தீப்பிடித்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எm முருகன் பார்வையிட்டு புதுச்சேரி காரைக்கால் பேருந்து டெப்போ மேலாளரிடம் தீப்பற்றிய குறித்து கேட்டறிந்தார்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %