0 0
Read Time:5 Minute, 2 Second

65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா ஹாஜி அலியேவை எதிர்த்து விளையாடினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். அதில் இன்று நடைபெற்ற மல்யுத்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.  காலிறுதி போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த கியாசி செக்க மொர்டசாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 1- 2 என்ற புள்ளிக்கணக்கில் அவர் போட்டியை வென்று, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில், ஃபால் ஓவர் முறையில் ஒரே மூவில் 2 புள்ளிகள் பெற்ற அவர், அதிரடியாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஃபால் ஓவர் அல்லது பின் என்றால், எதிர்த்து விளையாடுபவரை கட்டிப்போட்டு 2 நொடிகளுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும். மொர்டசாவை பின் செய்த பஜ்ரங், போட்டியை வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அஜர்பெய்ஜான் நாட்டைச் சேர்ந்த ஹாஜி அலியேவை எதிர்த்து பஜ்ரங் புனியா சண்டை செய்தார். இதில் முதல் ரவுண்டில் ஹாஜி 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால் இரண்டாவது ரவுண்டில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு பஜ்ரங் புனியா தள்ளப்பட்டார். இரண்டாவது ரவுண்டின் தொடக்கத்தில் ஹாஜி சிறப்பாக செயல்பட்டார். இதனால் 8-1 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்தார். இறுதியில் புனியா 11-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் அவர் நாளை வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்க உள்ளார். 

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் தோல்வி அடைந்து மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு இரண்டாவது வெள்ளிப்பதக்கத்தை வென்றார். நேற்று  காலை நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் காலிறுதிச் சுற்றில் பெலாரஷ்ய வீராங்கனை வனிசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். 53 கிலோ எடைப்பிரிவில் முதல்நிலை வீராங்கனையாக இருந்த வினேஷ் போகட் காலிறுதியில் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.பெலாரஷ்ய வீராங்கனை அரையிறுதியில் சீன வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதனால் வினேஷ் போகட் ரெபிசாஜ் ரவுண்டிற்கு செல்லும் வாய்ப்பு இல்லை. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் வினேஷ் போகட் வெளியேறி உள்ளார். 

மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். ஆடவர் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா சான் மெரினோ வீரரிடம் வெண்கலப்பதக்க போட்டியில் தோல்வி அடைந்தார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %