பூம்புகார் கடற்கரையில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யது பித்ரு ப்ரீதி செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி அமாவாசையை முன்னிட்டு புண்ணிய தலங்களிலும், நீர்நிலைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவேரின் எண்ணிக்கை சற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் கொரோனா 3 வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பரவலை பொறுத்து கட்டுபாடுகளை விதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஆண்டுதோறும் மயிலாடுதுறை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி, பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னேர்களுக்களுக்கு தர்பணம் கொடுப்பது வாடிக்கை. ஆடி அம்மாவாசை முன்னிட்டு காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது திரண்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் கடற்கரை மற்றும் காவிரி ஆறுகளில் பொது மக்கள் கூட வருகின்ற 9 ஆம் தேதி வரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.