ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 1991 – 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதன் முறையாக இந்த விருது வழங்கப்பட்டது. லியாண்டர் பயஸ், சச்சின் டெண்டுல்கர், தன்ராஜ் பிள்ளை, மேரி கோம் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த் பெயரிட வேண்டுமென்று இந்தியா முழுவதிலிமிருந்து பல கோரிக்கைகள் எனக்கு வந்தது. அவர்கள் உணர்வை மதித்து கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும். ஜெய் ஹிந்த்“ என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த மேஜர் தியான் சந்த்?யார் இந்த மேஜர் தியான் சந்த்?
மேஜர் தியான் சந்த் ஒரு ஹாக்கி வீரர் ஆவார். 1926 முதல் 1949 வரை சர்வதேச ஹாக்கி விளையாடினார். ஹாக்கியில் தியான் சந்த் 500 கோல்களுக்கு மேல் ஸ்கோரிங் செய்துள்ளார். அலகாபாத்தில் பிறந்த தியான் சந்த் 1928, 1932 மற்றும் 1936 தங்க பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.