0 0
Read Time:1 Minute, 33 Second

ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.

தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார்,ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

பள்ளியில் தற்போது 217 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன், கல்வி வழங்கி வருகிறார். அந்தக் குழைந்தைகளின் கல்வி, உணவு செலவுக்காக யாரிடமும் உதவி கேட்காத செல்வகுமார், வாரம் தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து, பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்கிறார்.

அந்த வகையில் நேற்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் பொது மக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மக்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வறுகிறார் உதவிப் பேராசிரியர் செல்வகுமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %