0 0
Read Time:8 Minute, 36 Second

B.E பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; 511 காலியிடங்கள்!

பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 200, திட்டப் பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ( பெல் நிறுவனம்) செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரபலமான மற்றும் முதன்மை மின்னணு நிறுவனமான இது பெங்களூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது திட்டப்பொறியாளர் மற்றும் பயிற்சி பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிறுவனத்தில் 511 காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.bel-india.in அல்லது https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதள பக்கத்திற்கு சென்று இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்பு அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 200-ம், திட்டப் பொறியாளர் – I பணியிடத்திற்கு ரூ. 500 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி முன் அனுபவங்களில் அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 511 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 308 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் என இங்கு தெரிந்து கொள்வோம். பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளராக பணியாற்ற விரும்பும் நபர்கள், 25வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதோடு 4 வருட பொறியியல் படிப்புகளில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிகஸ் & டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில், பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST and PwD பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு முதல் ஆண்டு- ரூ.25000, இரண்டாம் ஆண்டு- ரூ.28000, மூன்றாம் ஆண்டு – ரூ.31000 மாதச் சம்பளம் என அறிவிககப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 203 திட்டப்பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வருட பொறியியல் படிப்புகளில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிகஸ் & டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில், பி.இ அல்லது பி.டெக் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதோடு SC, ST and PwD பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என கூறப்பட்டுள்ளது. மேலும் 2 வருட துறைச்சார்ந்த பணி முன் அனுபவம் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதோடு முதல் ஆண்டு- ரூ.35000, இரண்டாம் ஆண்டு- ரூ.40000, மூன்றாம் ஆண்டு – ரூ. 45000, நான்காம் ஆண்டு –ரூ. 50000 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணி: ட்ரெயினி இன்ஜினியர் (Trainee Engineer)

காலியிடங்கள்: 308

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ(BE) அல்லது பி.டெக்(BTech) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் ஆண்டு – ரூ.25,000 2ம் ஆண்டு – 28,000 3ம் ஆண்டு – 31,000

பணி: ப்ராஜக்ட் இன்ஜினியர் (Project Engineer)

காலியிடங்கள்: 203

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ(BE) அல்லது பி.டெக்(BTech) முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் ஆண்டு – ரூ.35,000, 2ம் ஆண்டு – 40,000, 3ம் ஆண்டு – 45,000, 4ம் ஆண்டு – ரூ.50,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை: பிஇ(BE), பிடெக்(B-Tech) படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: Trainee Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200, Project Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-08-2021

மேலும் விவரங்களுக்கு : https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %