0 0
Read Time:2 Minute, 40 Second

இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழை.. வாட்ஸ்அப்பில் உடனுக்குடன் பெறலாம்.. எப்படி தெரியுமா?. முழு விவரம் உள்ளே!

கொரோனா இரண்டாவது அலை மத்தியில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்தனர். தற்போது தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கோவின் (CoWIN), உமாங் (UMANG) டிஜி லாக்கர் (Digi-locker) ஆரோக்கிய சேது (Aarogya Setu) ஆகிய செயலிகளில் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் இனிமேல் வாட்ஸ் அப்-பில் கொரோனா சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் ‘ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாமானியர்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துகிறோம்! இப்போது கொரோனா தடுப்பூசி சான்றிதழை MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய படிகளில் பெறுங்கள். +91 9013151515 என்ற வாட்ஸ்அப்பில் ‘கோவிட் சான்றிதழ்’ என டைப் செய்து அனுப்பவும். OTP ஐ உள்ளிடவும். உங்கள் சான்றிதழை நொடிகளில் பெறுங்கள்’ என்று கூறியுள்ளார்.

எப்படி பெறுவது? அதாவது நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ‘கோவிட் சர்டிபிகேட்(covid certificate) என டைப் செய்து மத்திய அமைச்சர் கூறியபடி +91 9013151515 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக உங்கக்ளுக்கு OTP எனப்படும் ஓன் டைம் பாஸ்வேர்டு எண் வரும். அந்த OTP எண்ணை மறுபடி டைப் செய்தால் ஒரு சில நொடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வந்து விடும். அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %