0 0
Read Time:1 Minute, 51 Second

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருந்திரளாய்  தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் முன்னிலையில் சுய உதவிக் குழுவினர், ஊக்குநர்கள், அரசுஅலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து தேசிய  கீதம் பாடும் நிகழ்ச்சி பாதிரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடாந்து பாதிரிக்குப்பம் கூட்டுறவு நகரில் உள்ள பூங்காவில் மரக் கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நட்டார். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நிலத்து ஓடையில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில்,  மகளிர்  திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கண்ணன், உதவி செயற்பொறியாளர் முகமது யாசின், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்பாபு, சக்தி, சுயஉதவிகுழுவினர், ஊக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %