மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது. இலை தண்டு காய் கனி வேர் அனைத்துமே உபயோகப்பட கூடியது.
மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் நெடு நாட்களாக இருந்த வயிற்றுப்புண் சீக்கிரமாக ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது இதனை பருகவேண்டும். இந்த சமயத்தில் உணவுகளில் உப்பு புளி காரத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும். இதன் பச்சை இலைகளை சிறிது எடுத்து நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். அல்லது, பச்சை இலைகளை, ஒரு நாளைக்கு ஐந்துமுறை நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.
ஜுரம், காய்ச்சல் போன்ற நோயினால் உடல் சூடு அதிகமாகி கை, கால்களில் வலி உண்டாகும். அதற்கு, மணத்தக்காளி செடியின் சில இலைகளை பறித்து, நன்றாக கசக்கி சாறாக்கி நெற்றியில் தடவினால் காய்ச்சல் குணமாகும். கை கால்களில் தடவினால் வலியை போக்கி குணம் கிடைக்கும்.
மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச் சார்ந்தது. தற்போது, அதல் மருததுவ குணங்கள் அதிகம் இருப்பதால், விவசாயில் பயிரிடுகிறார்கள். மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் கட்டுப்படுத்தும்.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நல்ல பலனைத் தருமாம்.
மணத்தக்காளி கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணம் உண்டு.
- மணத்தக்காளி கீரை கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது.
- மணத்தக்காளி கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.
- மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் புண்கள் குணமாகும்.
- மணத்தக்காளி கீரையானது இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
- மணத்தக்காளியானது மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.
- வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது மணத்தக்காளி.
- மணத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
- கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
- மணத்தக்காளி வற்றலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.
- உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.
- காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவது நல்லது.