Read Time:1 Minute, 10 Second
வடலூா் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் வீணாகி வருகின்றன.
வடலூா் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சியில் குறுகிய சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிக்க வசதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறிய வாகனங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் 2 வாகனங்கள் நீண்ட நாள்களாக உரிய பராமரிப்பு, பயன்பாடின்றி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகின்றன. இதுகுறித்து பேரூராட்சி அலுவலா் ஒருவா் கூறுகையில், இந்த வாகனங்களில் மின்கலன்கள் பழுதாகிவிட்டன. இதை சரிசெய்ய உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.