0 0
Read Time:6 Minute, 42 Second

தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஓர் அற்புதமான இயற்கைப் பொருள் தான் பூண்டு.

இரத்த உறைவைத் தடுக்கும்

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வாய்வுத் தொல்லை

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

புற்றுநோய் பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

பூண்டு கொண்டு உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைக்கும் முன், மருத்துவரை கலந்தாலோசித்து, அவரது பரிந்துரையின் பேரில் பயன்படுத்துங்கள். ஏனெனில் சிலருக்கு பூண்டு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

மேலும் அக்காலத்தில் சளி பிரச்சனைக்கு இந்த பூண்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டு மற்றும் தேன் : பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.

பூண்டு மற்றும் தண்ணீர்: 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு டீ : சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பூண்டு மற்றும் தக்காளி: 2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பரு நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

வயிற்றுப் புழுக்கள் பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பூண்டு பால் தேவையான பொருட்கள்: பால் – 1 கப் பூண்டு – 3 பற்கள் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 சிட்டிகை பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்

பூண்டு பால் செய்முறை * முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி!!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %