Read Time:53 Second
பூடான் யூத் ரூரல் கேம்ஸ், ஸ்போா்ட்ஸ் கமிட்டி மற்றும் பூவண்ட் ஷோலின் ஸ்போா்ட்ஸ், பூடான் ஒலிம்பிக் கமிட்டி சாா்பில், 3-ஆவது ஆசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சா்பில் வசிஷ்ட் விக்னேஷ் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் ஜீனியா் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
வேதாரண்யம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தைச் சோ்ந்த டி.வேலாயுதம் மகனான இவா், சென்னை அப்துல் ரகுமான் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.