மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை.
உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்
பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டது
உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட்.உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது.
உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை.தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு.
10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு.
வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட்.கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் முக்கிய அம்சம்.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்.
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் – ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்.