மயிலாடுதுறை அருகே 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து ஹர்ஷித் சாதனை படைத்துள்ளார்.
மயிலாடுதுறையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிப்பு மூலம் மூவர்ண தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார்.மயிலாடுதுறை மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஹர்ஷித். இந்த மாணவன் 75வது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில் வெர்ட்ச்யூ புக் ஆப் வேல்டு ரேக்கார்டு அமைப்பினர் முன்னிலையில் 600 சதுரஅடி பரப்பளவு உள்ள திரையில் இந்திய தேசிய மூவர்ணக்கொடியை கைபதிப்பு ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.
அக்ரலிக் பெயிண்ட் மூலம் 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்த மாணவருக்கு வேல்டு ரேக்கார்டு அமைப்பின் இயக்குனர் சுரேஷ்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.பள்ளியில் சேர்ந்தபோது சுதந்திர தினத்தன்று மாணவனின் பெற்றோர் மூவர்ணக்கொடியை நெற்றியில் திலகமிட்டுள்ளனர். சுதந்திரதினத்தை பற்றி தெரிந்துகொண்ட மாணவன் மூவர்ணக்கொடியை தினந்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவதாகவும் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த சாதணை முயற்சியை மேற்கொண்டதாகவும் பாரதபிரதமர் ஆக வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றும் தெரிவித்தார்.