0 0
Read Time:1 Minute, 25 Second

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி பேரவையின் இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று நீட் தேர்வு குறித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்து, நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

நீட் தேர்வுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க மாட்டோம், நல்லதைச் செய்தால் வரவேற்போம் என்றும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %