திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். பின்னர் மதியம் உணவு இடைவேளியின் போது பள்ளியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தலைமையாசிரியரின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இருப்பினும் அங்கிருந்த மூன்று பீரோக்களில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மேலும் நான்கு லேப்டாப், மேஜைகள், மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருந்த சீரூடைகள், புத்தகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. அது மட்டுமின்றி அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என உள்ள புத்தகங்கள் அங்கே தான் வைக்கப்பட்டிருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை நெருப்பில் முழுவதுமாக எறியாமல் தப்பியது, மீதமுள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்து சென்றனர்.

கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில முடியாமல் கஷ்டப்படுகின்றனர், அதிலும் அரசு பள்ளி மாணவர்களில் அதிகபட்சமான மாணவர்களின் வீட்டில் இணையதள வசதியும் கைப்பேசி வசதியும் இல்லாமல் இணையதள வகுப்புகளில் பயில முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு இருக்கும் சூழலில் தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடம் இவ்வாறு தீ பற்றியது தங்களுக்கு வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் கூறினர்.