0 0
Read Time:3 Minute, 9 Second

விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச் செய்து வரும் குடும்பத்தினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். குறிப்பாக, பண்ருட்டி வட்டத்தில் ஏரிப்பாளையம், வையாபுரிபட்டினம், நல்லூா்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இவா்கள் விநாயகா் சதுா்த்துக்கு 3 அடி முதல் 15 அடி உயரம் வரை சிலைகளை வடிவமைக்கின்றனா்.

கடந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் விநாயகா் சிலைகளைத் தயாரித்து வைத்திருந்தனா். ஆனால், கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக சிலைகளை விற்க முடியவில்லை.

இந்த நிலையில், அடுத்த மாதம் 10-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசு விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பதால் விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் கவலையில் உள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகா் சிலைகள்-களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா் நலச் சங்கத்தின் மாநில துணைச் செயலா் எஸ்.ஜானகிராமன் கூறியதாவது: கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால், விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதால், 10 மாத உழைப்பு, பல லட்ச ரூபாய் வீணானது. எஞ்சிய சிலைகளை நிகழாண்டு விற்பனை செய்யலாம் எனக் காத்திருக்கிறோம். நிகழாண்டு புதிதாக சிலைகள் தயாரிக்கவுமில்லை.

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு 3 வாரங்களே உள்ள நிலையில், இதுவரை விழாவைக் கொண்டாடுவது குறித்து அரசு எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.

கடந்தாண்டு சிலைகள் செய்ய பெற்ற கடனை அடைக்க வழியில்லாத நிலையில் உள்ளோம். நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடனாவது கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றாா் அவா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %