Category: # கடலூர் மாவட்டம்

நெய்வேலியில் பைக் மீது காா் மோதியதில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகா் ஊராட்சி, பி 2 மாற்றுக் குடியிருப்பு, 9-ஆவது பிரதான சாலையில் வசித்து வந்தவா் சின்னப்பையன் மகன் வீராசாமி (55). என்எல்சி நிறுவனத்தில்…

திட்டக்குடி அருகே கடத்த முயன்ற 2,100 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.கல்பனா தலைமையிலான போலீஸாா், வேப்பூா் அருகே காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம், வேப்பூா்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த…

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம்:உறவினர்கள் சாலை மறியல்கொலை வழக்காக பதிய வலியுறுத்தல்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே…

கடலூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்…

கடலூா் அருகே விபத்தில் குழந்தை பலியான வழக்கு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை.

கடலூா் அருகே சாலை விபத்தில் குழந்தை உயிரிழந்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே…

கடலூர்: குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் மக்கும் அவலம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், குப்பைகளை சேகரிப்பதற்காக, வாங்கப்பட்ட வாகனங்கள் மக்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பண்ருட்டி…

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம்.

கடலூா் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறினாா். மாவட்டத்தில் 9 முதல் பிளஸ்2 வகுப்பு வரையிலான…

சிதம்பரத்தில் வீரனார் கோவிலை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பழமை வாய்ந்த வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அதே பகுதியில் உள்ள மவுன…

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்கு ‘சீல்’

திட்டக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்ட மளிகைக் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். திட்டக்குடி – விருத்தாசலம் சாலைப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்…

சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவா் கைது.

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள்…